Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து

T

The Leader Desk

ஜனவரி 16, 2025 • 4:15 AM

பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அலிகானுக்கு, மும்பை லீலாவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.
  • இன்று (ஜன.16) அதிகாலை 2:30 மணியளவில் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள அவருடைய இல்லத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாகத் தெரிகிறது.
  • அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் பற்றி அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மும்பை லீலாவதி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நீரஜ் உத்தமானி கூறுகையில், “சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவமனை அழைத்துவரப்பட்டார்.
  • அவருக்கு 6 இடங்களில் காயங்கள் இருந்தன.
எழுத்து அளவு:

அலிகானுக்கு, மும்பை லீலாவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.

பொலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இன்று (ஜன.16) அதிகாலை 2:30 மணியளவில் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள அவருடைய இல்லத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாகத் தெரிகிறது. அப்போது நடைபெற்ற சண்டையில், சைஃப் அலிகான் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை பொலிஸாரின் தகவலின்படி, அடையாளம் தெரியாத நபர் சைஃப் அலிகான் இல்லத்துக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. கத்தியுடன் வந்த நபருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக, சைஃப் காயமடைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவத்துக்கு பிறகு, லீலாவதி மருத்துவமனைக்கு சைஃப் அலி கான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் பற்றி அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மும்பை லீலாவதி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நீரஜ் உத்தமானி கூறுகையில், “சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவமனை அழைத்துவரப்பட்டார். அவருக்கு 6 இடங்களில் காயங்கள் இருந்தன. ஒரு காயம் அவரது முதுகுத் தண்டவடத்தின் அருகே உள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை செய்கிறோம். அவருக்கு நரம்பியல் அறுவை நிபுணர் நிதின் டாங்கே, காஸ்மடிக் அறுவை நிபுணர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி உள்ளிட்டோர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னரே காயத்தின் தன்மை பற்றி மேலதிக தகவல்களைத் தெரிவிக்க முடியும்” என்றார்.

சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டாரா, அல்லது மர்ம நபருடன் ஏற்பட்ட மோதலால் காயமடைந்தாரா உள்ளிட்டவை குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து மும்பை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...