ஈரானில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினால் அவர்களின் விமான சேவையை இலகுபடுத்துவதற்கு, இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கையர்கள், டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை டெலிகிராம் அல்லது பின்வரும் அவசர எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
அதன்படி, இந்திய தூதரகத்தை +98 901 014 4557, +98 912 810 9115, +98 912 810 9109 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை பின்வரும் இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும் எனவும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.
+98 939 205 5161, +98 991 205 7522 (சிங்கள/ ஆங்கிலம்), +98 936 636 0260