முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குவைத், ஜோர்டான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் அதிபரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து லிபியா, சிரியா, காசாவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்கும் முடிவை மத்திய கிழக்கு நாடுகள் கைவிட வேண்டுமென்று பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.

பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்கும் "அடிப்படையற்ற" அழைப்புகள் "ஒரு தீவிர சிறுபான்மை குழுவால் மேற்கொள்ளப்படுவதாக" பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக பிரான்சில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஆசிரியர் ஒருவர் தலை வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்ரோங் தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த புறக்கணிப்பு போராட்டத்தை மத்திய கிழக்கு நாடுகள் கையிலெடுத்துள்ளன.

முன்னதாக, "இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை பறிக்க நினைப்பதால் ஆசிரியர் சாமுவேல் பேட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது" என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் எதிர்வினையாற்றியிருந்தார். இதே கருத்தை நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) அவர் உறுதிப்படுத்தினார்.

முகமது நபி அல்லது அல்லாஹ்வின் (கடவுள்) சித்தரிப்புகள் அல்லது உருவங்களை இஸ்லாமிய பாரம்பரியம் வெளிப்படையாக தடைசெய்கிறது.

முகமது நபியின் கேலிச்சித்திரம்: கொல்லப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் சந்தித்த மிரட்டல்

முகமது நபி கேலிச் சித்திரத்தை மறுபதிப்பு செய்த பிரெஞ்சு பத்திரிகை

ஆனால், மதச்சார்பின்மையை நாட்டின் அடையாளத்தின் மையமாக கொண்டுள்ள பிரான்ஸ் அரசு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளைப் பாதுகாக்க கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பது, ஒற்றுமையைக் குறைத்து மதிப்பிடும் செயல் போன்றது என கூறுகிறது.

துருக்கி மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மக்ரோங், முஸ்லிம்களின் மத அல்லது "நம்பிக்கை சுதந்திரத்தை" மதிக்கவில்லை என்றும் இதன் மூலம் பிரான்சில் உள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களை ஓரங்கட்டியதாகவும் குற்றம் சாட்டினர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதுதொடர்பாக மக்ரோங்கை தொடர்ந்து இரண்டாவது முறையாக விமர்சித்த துருக்கியின் அதிபர் ரிசெப் தயிப் எர்துவான், இஸ்லாம் குறித்த தனது கருத்துக்களுக்காக மக்ரோங் "மனநல பரிசோதனைகளை" பெற வேண்டும் என்று கூறினார்.

பிரான்சில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதியன்று தலை வெட்டி கொல்லப்பட்ட ஆசிரியர், முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக தொடர்ந்து மிரட்டல்களை எதிர்கொண்டு வந்தார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் பாரிஸின் வடமேற்கில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூஃப்லா செயின்ட் ஹொனோரின் எனும் நகரில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, தாம் பணியாற்றிய பள்ளிக்கு அருகே 47 வயதாகும் சாமுவேல் பேட்டி என்னும் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கான ஆசிரியர் கொல்லப்பட்டார்.

இந்த கொலை நடந்தபோது தாக்குதலாளி 'அல்லாஹு அக்பர்' என்று கத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலையாளி ஆசிரியர் சாமுவேலை கொல்லும் முன் அவர் யார் என்று அடையாளம் காட்டுமாறு மாணவர்களிடம் கேட்டார் என பிரான்ஸ் தீவிரவாத தடுப்பு காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி