அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான மோதலுக்கிடையே, “தி அமெரிக்கன் பார்ட்டி” என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார்.

அமெரிக்க அரசு கொண்டுவந்த வரி மற்றும் செலவுச் சட்டமூலத்தால், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் டெஸ்லா நிறுவனரும் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி, பொது வெளியிலேயே (சமூக ஊடகங்களில்) சண்டையிட்டனர்.

இதனிடையே, “80 சதவிகித நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா?” என்று, தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு நடத்தினார்.

இந்தக் கருத்துக் கணிப்புக்கு 80 சதவிகிதத்தினர் (56.30 இலட்சம் பேர்) `ஆம்’ என்று பதிலளித்தனர். அமெரிக்க மக்களின் இந்த பதில், சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது. இந்த நிலையில், புதிய கட்சிக்கு “தி அமெரிக்கன் பார்ட்டி” என்று எலான் மஸ்க் பெயரிட்டு, அறிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி