சீனா மீதான கூடுதல் வரி விதிப்பு எதிரொலியாக, ஹொலிவூட் படங்களுக்கு சீன அரசு தடை
விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 54% வரி விதித்த ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சீன அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, சீன செய்தி நிறுவனம் ஸின்ஹுவா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஹொலிவுட்டில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவிக்கின்றன. அமெரிக்காவை விட சீனாவில் குறிப்பிடத்தகுந்த இலாபத்தைப் பெறும் ஹொலிவூட் படங்களும் இருந்து வருகின்றன.
மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில் ஹொலிவூட் படங்கள் வெளியாகின்றன. ஹொலிவூட் படங்கள் உலகளவில் செய்யும் வசூலில் 10% சீனாவில் இருந்து மட்டும் கிடைக்கிறது.
இதனிடையே, ஹொலிவூட் படங்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு மேற்கொண்ட ஒப்பந்தங்களின்படி, சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள், ஹொலிவூட் படங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் விநியோகப் பணிகளைச் செய்துவந்தனர்.
வருவாய் பகிர்வின் அடிப்படையில் ஆண்டுக்கு புதிதாக 34 வெளிநாட்டுப் படங்கள் சீனாவில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கான டிக்கெட் விற்பனையில் 25% வருவாய் சீன அரசுக்குச் செல்கிறது. சிறிய தொகையில் எடுக்கப்படும் படங்கள், இந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு உள்ளூர் விநியோகஸ்தரால் வெளியிடப்படுகிறது.
சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில், திரைப்படத் துறையும் ஒன்றாக உள்ளது. தற்போது அமெரிக்கா விதித்துள்ள திருத்தப்பட்ட வரி விதிப்பின்மூலம் திரைப்பட வணிகமும் இரு நாடுகளுக்கு இடையே பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனா, ஹொலிவூட்டுக்கு ஒரு பெரிய சந்தையாகும். மேலும், திரைப்படங்கள் தங்கள் பொக்ஸ் ஒஃபிஸ் வெற்றியை வலுப்படுத்தக்கூடிய இடமாக இருந்தது.
ஆனால் இப்போது, தி ஹொலிவூட் ரிப்போர்ட்டர் போன்ற ஊடகங்கள், சீன அரசாங்கம் வரிகளுக்குப் பழிவாங்கும் விதமாக ஹொலிவூட் திரைப்பட வெளியீடுகளைத் தடை செய்யலாமா வேண்டாமா என்று விவாதித்து வருவதாக சீன வலைப்பதிவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறுகின்றன.
“கடந்த பத்து வருடங்களாக, சீனாவில் ஹொலிவூட் ப்ளொக்பொஸ்டர் படங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வெளியீடுகள் குறைவாகவே உள்ளன. ஒரு காலத்தில் பெரிய சந்தை ஹொலிவூட்டுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது, மேலும், பிரமாண்டமான திரைப்படங்கள் அங்கு பொக்ஸ் ஒஃபிஸில் நூற்றுக்கணக்கான மில்லியன்களை ஈட்ட முடியும்.
“நாம் சீனாவிற்கு ஏராளமான படங்களை அனுப்புகிறோம், அவர்கள் அங்கு சென்றதும் பணம் சம்பாதிக்கிறார்கள். இங்கு சீனப் படங்கள் அவ்வளவாக வருவதில்லை, பாரம்பரியமாக அவை அதிக வசூல் செய்வதில்லை. இது ஒருதலைப்பட்ச வர்த்தக நிலைமை.
“இந்த இரண்டு ஓட்டங்களையும் முடக்குவது என்பது அமெரிக்க நிறுவனங்கள் திரைப்படங்களுக்கு எவ்வளவு செலவு செய்கின்றன என்பதை மறுகட்டமைக்க வேண்டும், மேலும் சீனாவில் பணம் சம்பாதிக்கும் திறன் இல்லாமல் உண்மையில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும்.
“கோடைக்கால ளொக்பொஸ்டர் சீசனில் நாம் நுழையும்போது, Zootopia 2, Jurassic Park: Rebirth, Thunderbolts போன்ற பெரிய திரைப்படங்கள் சீனாவிற்குச் செல்லவில்லை என்றால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும். மேலும் அந்த வருவாய் நீக்கம் ஸ்டுடியோக்களை எவ்வாறு பாதிக்கும்.