பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் உலகில் உலாவுவதால்,
குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பல பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகி, தங்கள் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை புறக்கணித்துவிட்டதாக, கல்வி அமைச்சின் பாடசாலைச் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து கல்விப் பிரிவின் இயக்குநர் கங்கா தில்ஹானி கூறியுள்ளார்.
இதனால், தனிமையில் வாழும் பெண் குழந்தைகளின் சதவீதம் அதிகரித்துள்ளதெனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது இந்த நிலைமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அவர் மேலும் கூறியுள்ளார்.