கண்டி மாவட்டத்தில் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளைப் பிடித்து ஒரு தீவு ஒன்றில்

விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாவட்டத்தில் பயிர்களுக்கு குரங்குகளால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழு நேற்று (27) கூடியபோது இந்த முடிவு எட்டப்பட்டது.

கண்டி மாவட்டத்தில் வாழும் யானைகளை ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நடுவில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில் 15 கிராமங்களில் செயல்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டத்திற்கு ஏற்கனவே 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தலைமையிலான குறித்த குழுவுடன், ஏற்றுமதி விவசாய திணைக்களம், வன விலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம், கடற்படை, விவசாயத் திணைக்களம் உள்ளிட்டவற்றைக் கொண்ட தொடர்புடைய குழு இந்த முடிவுகளை எடுத்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி