நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான திகதி நாளை (20) அறிவிக்கப்படும்

எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அதேநேரம் வேட்புமனுக்கள் நாளை நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்தநிலையில், நேற்றைய தினம் மொத்தமாக 21 கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை முன்வைக்க ஒன்றரை மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்த பிறகு, பேரணிகள் அல்லது வாகனப் பேரணிகளை நடத்துவது தேர்தல் சட்டத்தின் கீழ் முரணானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி