இலங்கை இராணுவத்தினரால் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை

செய்யப்பட்ட பிரேமாவதி மனம்பேரி மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டவர்களுக்கான நீதி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போது  மேற்கண்ட விடயம் தொடர்பில் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

"பட்டலந்த என்பது, 1988 - 1989 காலப்பகுதியில் நாட்டில் இருந்த ஜேவிபி போராளிகளை கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இடம். அது தொடர்பிலான ஆணைக்குழு அறிக்கை இவ்வளவு காலம் கிடப்பில் இருந்து தற்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச நேர்காணலினால் பேசுபொருளாகியுள்ளது.

“இந்த படுகொலைகள் தொடர்பாக, அக்காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வரை சமர்ப்பித்திருந்தார். ஆனால், அப்போதும் இதற்கான தீர்வுகள் எட்டப்படவில்லை.

“சந்திரிகா காலத்திலும் கண்டுகொள்ளப்படாத இவ்விடயம் தற்போது, கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருப்பது நியாய பூர்வமானது. அந்தவகையில், கதிர்காமத்து அழகி மனம்பேரி, சொந்த சகோதரர்களான இராணுவத்தினரால் ஆடைகள் களைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது உலக வரலாற்றிலேயே மிக கேவலமான ஒரு பதிவு.

“அவ்வாறான நிலையில் அதற்கு நீதி பல காலமாக கோரப்பட்டு வருகின்றது. அதேபோல தமிழ் தேசிய இனம் சார்ந்த இசைப்பிரியா மற்றும் கிருஷாந்தி போன்றவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு பின்பால் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

“அவர்களுக்கான நீதி விசாரணைகளை நாங்கள் பல இடங்களில் கோருகின்றோம். தமிழர்களுக்கு நடந்தது மிகப்பெரிய இனப்படுகொலை. ஆனால், சிங்கள மக்களின் எழுச்சி, கிளர்ச்சிகளுக்கு எதிராக இந்த வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி