இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக பெண்கள் குழந்தைகள்
உட்பட 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காஸா யுத்த நிறுத்த உடன்படிக்கையை சீர்குலைப்பதற்காக காஸா பொதுமக்கள் மீது இந்த துரோகத்தனமான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஜனவரி 19ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்து வரும் யுத்த நிறுத்தத்தை, வேண்டுமென்றே இஸ்ரேல் சிதைத்துள்ளது என பாலஸ்தீனிய ஜிகாத் அமைப்பு தெரிவித்துள்ளது.
232 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அல்ஜசீரா, தற்காலிக பாடசாலைகள், பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ளது.