கொழுந்து பறிக்கும் போட்டியில முதலாம் இடத்தைப் பெற்ற தலவாக்கலை கிரேட் வெஸ்டன்

தோட்டத்தைச் சேர்ந்த அந்தனி இரேஷா ராஜலெட்சுமி தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்தே இச்சாதனையை படைத்துள்ளார். 

இவருக்கு தங்கப் பதக்கத்துடன் 650,000 ரூபாய் ரொக்கப் பரிசுடன் வர்ண தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

3வது தடவையாக ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியினால் கொழுந்து பறிக்கும் போட்டி இன்று (01) ரதல்ல பிரதேசத்தில் நடைபெற்று பின்னர் பரிசு வழங்கும் நிகழ்வு ரதல்ல விளையாட்டு மைதானத்தில நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரத அதிதியாக வேறலிஸ் நிறுவனத்தின் தலைவர் மொஹான் பண்டித்த கே மற்றும் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் ராஜதுரை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கொழுந்து பறிக்கும் போட்டியில் ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியின், கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனி, தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி, ஹொரண பெருந்தோட்ட பெருந்தோட்ட கம்பனி ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 60 தோட்டங்களைச் சேர்ந்த 50 போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு போட்டிக்காக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இற்றேரத்தில் தரமுள்ள  அதிக கிலோ கொழுந்தை பறிப்பவர்களுக்கே முதல் 3 இடங்கள் வழங்கப்பட்டன.

அதற்கமைய 3 பெருந்தோட்ட கம்பனிகளிலிருந்தும் வெண்கல பதக்கத்தை பெற்று 3 ஆம் இடத்தை, கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனியின் M. மாரியாய்,  தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் வீரையா வனிதா மற்றும் ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் P. சந்ரலேகாவும் பெற்றுக் கொண்டனர்.

அத்தோடு வெள்ளி பதக்கத்தை பெற்று 2ஆம் இடத்தை,  களனிவெளி பெருந்தோட்ட கம்பனியின்  சுப்பிரமணியம் கோமதி, தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின்  தர்மலிங்கம் பூமணி, ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் K. கவிதா பெற்றுக் கொண்டனர்.

இப்போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தங்க பதக்கத்தை , கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனியின் M. இந்திராகாந்தி,தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் எந்தனி இரேஷா ராஜலெட்சுமி, ஹொரண பெருந்தோட்ட கம்பனியின்  சுகுமாறன் ராஜலெட்சுமி பெற்றுக் கொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி