அஸ்வெசும குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியவர்களுக்கு

வழங்கப்படவுள்ள 3,000 ரூபாய் கொடுப்பனவு, நேரடியாக அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூகக் கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, தேவைப்படும் குடும்பங்களில் உள்ள முதியவர்களைத் தவிர்த்து, இதுவரை உதவித் தொகையைப் பெற்றுவரும் பெரியவர்களுக்கு மட்டுமே தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சு கூறியுள்ளது.

இருப்பினும், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, கடந்த காலத்தில் குறிப்பிட்ட திகதியில் உதவித் தொகையை செலுத்த முடியாமல் போனதால், முதியவர்கள் சிரமப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர், பெப்ரவரி 2025 உதவித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை பெப்ரவரி 20ஆம் திகதி முதல் தபால் மற்றும் துணை தபால் அலுவலகங்கள் மூலம் செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web