போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதை அடுத்து, அடுத்தக்கட்ட பணயக் கைதிகள் விடுவிப்பை
மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏறத்தாழ 15 மாத போரைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஜனவரி மாத இறுதியில் 6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி பரஸ்பரம் இரு தரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா பகுதியில் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர வேண்டிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் ,ராணுவம் தடுப்பதாக கூறப்பட்டுள்ளது.