Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பெப். 15 முதல் இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

T

The Leader Desk

ஜனவரி 28, 2024 • 6:04 AM

பெப். 15 முதல் இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த தகவலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இதன்படி இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரை இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை 15, 2024 பெப்ரவரி 15 முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளது.
  • எனினும் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இந்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • மேலும், இந்த கப்பலில் 150 பயணிகள் பயணிக்கமுடியும் என தெரிவித்த அவர் ஒரு பயணி 60 கிலோவினை கொண்டு செல்லமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தகவலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரை இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை 15, 2024 பெப்ரவரி 15 முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் இரு நாடுகளுக்கிடையில் திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் புத்துயிர் பெறவுள்ளதாக அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டது.

எனினும் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இந்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஆரம்பிக்கும் இந்த சேவையில், இறுதியாக சேவையில் ஈடுபட்ட செரியாபானி கப்பல் ஈடுபடாது எனவும் சிவகங்கை என்ற கப்பலே அந்த சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கப்பலில் 150 பயணிகள் பயணிக்கமுடியும் என தெரிவித்த அவர் ஒரு பயணி 60 கிலோவினை கொண்டு செல்லமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சேவையில் ஒரு வழிப் பயணத்துக்கு 80 அமெரிக்க டொலர், அதாவது 6 ஆயிரத்து 600 இந்திய ரூபாய், இலங்கை ரூபாவாக 26 ஆயிரம் அறவிடப்படவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...