Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

முகநூல் பதிவால் சிறைப் பிடிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளருக்கு 15 மாதங்களுக்கு பின் பிணை

T

The Leader Desk

மார்ச் 8, 2022 • 12:22 PM

முகநூல் பதிவால் சிறைப் பிடிக்கப்பட்ட  தமிழ் ஊடகவியலாளருக்கு 15 மாதங்களுக்கு பின் பிணை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போரில் கொல்லப்பட்ட தமிழ் சமூகத்தைப் பற்றி பதிவிட்டதற்காக 15 மாதங்கள் சிறையில் இருந்த தமிழ் ஊடகவியலாளருக்கு, ஜெனிவா மாநாட்டில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்ற தினத்தன்று நீதிமன்றத்தால் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
  • கோகுலன் என்று அழைக்கப்படும் ஊடகவியலாளரான கோகுலதாசன் 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையில், நேற்று (மார்ச் 07) ஆம் திகதி வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட குற்றச்சாட்டில் மட்டக்களப்பு ஊடகவியலாளர் வாழைச்சேனைப் பொலிஸாரால் 2020 டிசம்பர் 28ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
  • சுதந்திர ஊடகவியலாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன் 20.11.28 அன்று வாழைச்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
எழுத்து அளவு:

போரில் கொல்லப்பட்ட தமிழ் சமூகத்தைப் பற்றி பதிவிட்டதற்காக 15 மாதங்கள் சிறையில் இருந்த தமிழ் ஊடகவியலாளருக்கு, ஜெனிவா மாநாட்டில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்ற தினத்தன்று நீதிமன்றத்தால் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கோகுலன் என்று அழைக்கப்படும்  ஊடகவியலாளரான கோகுலதாசன் 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையில், நேற்று (மார்ச் 07) ஆம் திகதி வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனைப் பொலிஸில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட குற்றச்சாட்டில் மட்டக்களப்பு ஊடகவியலாளர் வாழைச்சேனைப் பொலிஸாரால் 2020 டிசம்பர் 28ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS), போரில் இறந்தவர்களை நினைவுகூரும் பதிவையே அவர் பதிவிட்டதாகக் கூறியுள்ளது.

அவரை சிறையில் அடைக்கப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தப்பட்ட மக்கள் மனு இயக்கத்துக்கு நாடு முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

“நினைவூட்டல் உரிமையை குற்றமாக மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. சுதந்திர ஊடகவியலாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன் 20.11.28 அன்று வாழைச்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டார். இறந்த தமிழர்கள் பற்றிய கருத்துக்களை எஃப்.பி (FB)-யில் பகிர்ந்ததே அவர் செய்த ஒரே குற்றம்” என்று JDS கூறியது.

எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) கோகுலன் மீதான குற்றச்சாட்டுகளை "அபத்தமானது" என்று கண்டித்துள்ளதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அடுத்த விசாரணை ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட 'டியூப் தமிழ்' யூடியூப் சேனலின் முகுந்தன் திவான்யா மற்றும் விமல் ராஜ் ஆகியோர் ஒரு வருடத்திற்கு முன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளை உயர்த்துவதற்காக அவர்கள் செயற்பட்டதாக பொலிஸார் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முகநூல் பதிவால் சிறைப் பிடிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளருக்கு 15 மாதங்களுக்கு பின் பிணை | Tamil Leader | We Lead the Nation