சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்

மறைக்கப்பட்ட சாட்சிகளை, ஆதாரங்களை தேடும் புதிய நடவடிக்கையை பாதுகாப்புத்துறை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகின்றது.

அதேசமயம் லசந்த கொலை, அவரது சாரதி கடத்தல் முயற்சி போன்றவற்றில் சந்தேகநபர்களாக கருதப்படுவோர் மீது சாட்சியங்கள் இருப்பின் அவற்றை தொகுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களமும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

லசந்த கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத காரணத்தினால் அதில் அரசியல் அழுத்தங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராயுமாறு கடந்த வாரம் சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பான சட்ட மா அதிபரின் விருப்புரிமை மற்றும் நடைமுறைகளில் அமைச்சரவை அல்லது அரசியல் அதிகாரிகள் தலையிடக்கூடாது என்று  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web