நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக, பல பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் மின் விநியோகம் தடைப்பட்டது.
நேற்று (09) ஏற்பட்ட மின் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையமும் செயலிழந்து விட்டதாகவும் இதன் விளைவாக, அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என்றும், இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
900 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு, தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கியுள்ளது. இதனால் மின்வெட்டு ஏற்படும் என்று மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள மின்வெட்டு விபரங்களை மின்சார சபை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.