அரச புலனாய்வு சேவையின் (எஸ்.ஐ.எஸ்) பணிப்பாளர் தலைவர் ஜெனரல் சுரேஷ் சல்லே (Major General Suresh Sallay) நீதிக்கான திட்ட நிர்வாக தலைவர் (ITJP) யஷ்மின் சூக்காவிடம் இழப்பீடு கோரி வழக்கறிஞர் பசன் வீரசிங்க ஊடாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் தன்னை போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறியும் தனது நற்பெயருக்கு களங்கம்  விளைவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் வழக்கறிஞர் பசன் வீரசிங்க லண்டனில் உள்ள யஷ்மின் சூக்காவின் முகவரி மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் தலைமையகத்திற்கு டி.எச்.எல் கொரியர் சேவை மூலம் இந் த முறைப்பாட்டை அனுப்பியுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக!

ஒரு சர்வதேச அமைப்பு அதிகாரி மீது வழக்குத் தொடரப்படுவது இதுவே முதல் முறை.

சுரேஷ் சலேஹ் உட்பட மே 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட ஐந்து அதிகாரிகளை விமர்சித்து யஷ்மின் சூக்கா கடந்த ஜூன் 1 ம் திகதி செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.

எல்.ரீ.ரீ.ஈ உடன் தொடர்பு கொண்ட தற்போதைய அமெரிக்க மருத்துவர் டாக்டர் துரைராஜா வரதராஜா, 2009 வன்னி மனிதாபிமான நடவடிக்கைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டி, சுரேஷ் சலேவுக்கு எதிராக யஸ்மின் சூகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி