leader eng

கடந்த அரசாங்கத்தின்போது

அதிகாரமிக்க அமைச்சு ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன்படி, இது தொடர்பாக முன்னாள் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவரைக் கைது  செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த சிங்கள பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
 
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர்  கடந்தகால அரசியல்வாதிகளின் பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அவற்றை உரிய நிறுவனங்களுக்கு விசாரணைக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
 
அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக இது தொடர்பான விசாரணைகளை புலனாய்வாளர்கள் மேற்கொண்டு பல ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், ஊழல் கொடுக்கல், வாங்கல்களுடன் தொடர்புடைய முன்னாள் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவரைக் கைது செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  தெரிய வந்துள்ளதாகவும் மேலும் கூறியுள்ளது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி