leader eng

தற்போதைய ஜனாதிபதி கடந்த

ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கி, மக்களின் எதிர்பார்ப்புகளை உச்ச நிலைக்கு கொண்டு வந்தார். நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளை விரைவில் எம்மால் தீர்க்க முடியும் என்று சொன்னார். தாம் ஆட்சிக்கு வந்த பிறகு தீர்க்க முடியும் என்றார். ஜனாதிபதியான பின்னர் வாக்குறுதிகளில் இருந்து தூர விலகி செயற்படுகிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மின் கட்டணத்தை 66% குறைக்கலாம் என்று தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தும் அவர் கூறியவாறு இதனை குறைக்கவில்லை. இவற்றைச் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவையில்லை. அதிக ஊழல் காரணமாகவே மின் கட்டணம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து இன்று வரை அவரால் மின் கட்டணத்தை குறைக்க முடியவில்லை.  தேர்தல் காலப்பிரவில் மக்களின் எதிர்பார்புகளை உச்சத்துக்கு கொண்டு வந்து, இன்று ஆட்சிக்கு வந்தும் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது, மக்கள் அபிலாஷைகள் நீர்மூலமாக்கியுள்ளார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு கெஸ்பேவ மக்களுடனான சந்திப்பொன்று இன்றைய (01) தினம் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ தேர்தல் தேர்தல் தொகுதி அமைப்பாளர் கயான் த மெல் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
கடவுச்சீட்டுக்கான வரிசையை தீர்த்து வருவதாக தெரிவித்தனர், ஆனால் தற்போது அத்தியாவசிய நபர்கள் மட்டுமே கடவுச்சீட்டு பெற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஓரு சில  நாட்களுக்குள் கடவுச்சீட்டு வரிசை முடிந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று வரிசைகள் அதிகரித்து காணப்படுகின்றன. சிறந்த கடவுச்சீட்டை பெற்றுத் தருவோம் என்றனர். ஆனால் தற்போது கடவுச்சீட்டு தட்டுப்பாட்டால் சமூகப் பிரச்சினைகளும் உருவாகியுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் அவரை வெற்றி பெறச் செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்து வாக்களித்தவர்கள் கூட மீளச் செல்ல முடியாத நிலையைம் ஏற்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதாக தெரிவித்தனர். விலை குறைப்பு எப்படி போனாலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. சாதாரண மக்கள் பயன்படுத்தும் அரிசியை கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்காய்களை கொள்வனவு செய்வதற்குக் கூட வரிசைகள் காணப்படுகின்றன. வாழ்க்கைச் சுமை அதிகரித்து அழுத்தம் அதிகரித்துள்ளது என சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
 
பெட்ரோல், டீசல் தேவையில்லாமல் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றம் சாட்டினர். ஊழல் அதிகமாக இருப்பதால் தான் இவற்றின் விலைகளும் அதிகரித்து காணப்படுவதாக தெரிவித்தனர். தாம் ஆட்சிக்கு வந்தால் இதிலுள்ள ஊழலை ஒழிப்போம். பெட்ரோல் விலையை குறைப்போம் என்று கூறினர். இன்று சாதாரண மக்களின் அன்றாட  அத்தியாவசிய எரிபொருட்களின் விலைகளை ஆட்சியில் இருந்தும் குறைக்க முடியாதுபோயுள்ளது.
 
உழைக்கும் வர்க்கத்திற்காக பேசும் இவர், முதலாளித்துவ வர்க்கம் பயன்படுத்தும் எரிபொருட்களினது விலைகளையே குறைத்திருக்கிறார். உழைக்கும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களின் விலைகளை இவர் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
பொய்யான அரசியல் அலங்கார ஆட்சியையே முன்னெடுத்து வருகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட்டுள்ளார். வரியைக் கூட குறைக்க இவரால் முடியாது போயுள்ளது.
இந்த ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புகளை நீர்மூலமாக்கி, ஊடகங்களுக்கும் அழுத்தங்களை பிரயோகிக்க முற்படுகிறார் என்று சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
 
ஊடகங்கள் ஜனநாயக ஆடையை அணிந்து கொள்ள வேண்டும் என அச்சுறுத்தும் ஜனாதிபதி, சர்வாதிகார ஆட்சிக்கு முயற்சிக்கிறார். ஒரு கட்சி மூலம் ஆட்சியை கொண்டு வந்து எதிர்த் தரப்பினரின் கருத்துகளை ஒழிக்க நினைத்தால் அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். ஜனநாயக நாட்டில், ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி