இலங்கை அச்சுறுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அறிக்கைகள் மற்றும் பிரச்சாரங்கள் தவறானவை  என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறுகிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் இதுபோன்ற தவறான பிரச்சாரங்களையும் அறிக்கைகளையும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக எந்த தகவலும் உளவு அமைப்புகளுக்கு கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவந்துள்ளது உள் மற்றும் வெளி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து உளவுத்துறை தகவல்களை பெற புலனாய்வு அமைப்புக்களை பலப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இராணுவம் மற்றும் பொலிசாரின் உதவி பெறப்பட்டதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்த வகையிலும் புறக்கணிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தனது அறிக்கையில், தேசிய பாதுகாப்பைப் பேணிக்கொண்டு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக ஏராளமான இராணுவத் தினரும் பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி