ஹிரு செய்திக்கு இன்று (18) சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும் இது புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஹிரு செய்திக் குழு தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் குறிப்பாக போர் கொண்டாட்டத்தை நோக்கமாகக் கொண்டது.

இருப்பினும், 2009 ஆம் ஆண்டில் புலிகள் நாட்டிலிருந்து முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்து பத்து வருடங்களுக்கும் மேலாகின்றது , இந்த ஹிரு செய்தியின் படி, விடுதலைப் புலிகள் இன்னும் செயற்பாட்டில்  உள்ளார்களா என்பது சந்தேகமே. ராஜபக்ஷ ஆட்சியின் போது எல்.ரீ.ரீ.யினரை  தோற்கடித்து போரில் வெற்றி பெற்றனர். ஆனால் இந்த செய்தியுடன் சமூகத்தின் முன் ஒரு கடுமையான பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏனென்றால் போருக்கான தலைமை பங்கு வகித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தற்போது  நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றபோது எல்.ரீ.ரீ.ஈ எவ்வாறு மீண்டும் செயற்பட முடிந்தது இது  சிக்கலான காரியம்.

இருப்பினும் விமானப்படை செய்தித் தொடர்பாளர் எல்.ரீ.ரீ.ஈ யால் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று அவர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி