leader eng

எதிர்காலத்தில் அமைக்கப்படும்

அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதியுடன் கைகோர்த்து IMF உடன்படிக்கையில் திருத்தம் செய்து மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே சர்வதேச நாணய நிதியத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு பல புரிதல்களை எட்டியது. 
 
தற்போதைய ஆட்சியாளர்களாலும் இந்த இணக்கப்பாட்டை மாற்ற முடியாது போனாலும், ஐக்கிய மக்கள் சக்தியால் அதனைச் செய்ய முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 
 
தேர்தல் நடைமுறை என்பது ஒரு ஜனநாயக நாட்டின் முக்கிய அம்சமாகும். தேர்தல்கள் மூலம் நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபை உறுப்பினர்களுக்கு மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்றனர். இந்த பெறுமதியான செயற்பாடு பாதுகாக்கப்பட்டு ஜனநாயகம் பேணப்பட வேண்டும். இந்த முறைமையினால் சாதாரண மக்களின் குரலுக்கு உரிய பெறுமதி கிடைக்கும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சக்தியின் பொரலை தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில்  அண்மையில் பொரல்லையில் இடம்பெற்றது. 
 
ஐக்கிய மக்கள் சக்தியின் பொரல்ல தேர்தல் தொகுதி அமைப்பாளர் ஜனக நந்தகுமார ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 
 
எந்த தேர்தலை நடத்தினாலும் வங்குரோத்து நிலையில் கடனை அடைக்க முடியாத நாடாக இருந்து வருகிறோம். இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். 
 
இந்த வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட மற்றும் துயரத்தில் உள்ள அனைவரையும் பலப்படுத்தி பாதுகாப்பது நமது பொறுப்பாக இருக்க வேண்டும். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு சிறந்த வேலைத்திட்டமும் சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட கட்சியும், குழுவும் யாருடன் உள்ளனர் என்பதை இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் சிந்திக்க வேண்டும். 
 
2028 ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்துவதற்கான ஒப்பந்தங்களில் முன்னாள் ஜனாதிபதியும் அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளனர். IMF 2033 இல் இருந்து கடனை கட்டலாம் என்று கூறி இருந்த போதும் அரசாங்கம் அதை 2028 ஆக குறைத்துள்ளது. 2028 முதல் கடனை செலுத்த, போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு இங்கு இருக்க வேண்டும். ஆனால் இன்று ஒரு நாடாக நாம் கடினமான நிலையில் இருக்கிறோம். பொருளாதாரம் சுருங்கி, மக்களின் வாழ்வாதாரம் அழிந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நலிவடைந்துள்ள நிலையில், விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி