கிரீன் கார்ட் லொத்தர் எனப்படும்
2026 பன்முகத்தன்மை விசா சீட்டிழுப்புத் திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் இன்று 2 ஆம் திகதி பகல் 12.00 மணி முதல் (உள்ளூர் நேரம் இரவு 9.30 மணி) ஒன்லைன் பதிவுக்காக திறந்திருக்கும்.
நவம்பர் 5 ஆம் திகதி (உள்ளூர் நேரம் இரவு 10.30 மணி) வரை பதிவு செய்யலாம்.
பன்முகத்தன்மை விசா (DV) திட்டம் 1990 இன் குடியேற்றச் சட்டத்தால் நிறுவப்பட்டது, மேலும் 1995 நிதியாண்டில் தொடங்கி, 55,000 புலம்பெயர்ந்த விசாக்கள் வருடாந்திர லொத்தர் மூலம் வழங்கப்படும்.
https://dvprogram.state.gov/ மூலம் விண்ணப்பிக்கலாம் என்று நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது .