கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான சிறப்பு கலந்துரையாடலுக்கான கூ ட்டம் மே 12 மதியம் 2.30 மணிக்கு தேர்தல் ஆணைக் குழுவில் கூட்டப்படவுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு  பொதுத்தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக கலந்துறையாடுவதற்காக கட்சிகளின் முவர்களை மட்டுமே அழைத்துள்ளது  

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பல 'டம்மி' பிரதிநிதிகளும்  இக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

தேர்தல் செயலக வட்டார தகவளின்படி, அரசாங்கத்தின் பாதக செயற்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட்டு வருவதாகவும், அதனால்  முன்னணி மற்றும் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கு மொட்டுக் கூட்டனியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உருமயவின் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் தலைவர் வாசுதேவ நானயக்கார ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மேலும், சஜித் பிரேமதாசவின் 'சமகி ஜன பல வேகய'  கூட்டணி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக இல்லாத கட்சிகளை கூட்டி குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

'மொட்டு ' கட்சி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப் பட்ட கூட்டணி அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி