தபால்மூல வாக்குகளின் முடிவுகள்
வெளியாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் பகிரப்படுவதை FactSeekers இனால் அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் factseeker வினவியபோது, தேர்தலின் பின்னரே தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இவ்வாறான போலி பதிவுகள் வாக்காளர்களை தவறாக வழிநடத்துவதாகவும், இது தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் factseeker இடம் தெரிவித்தார்.
அதன்படி, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் தபால் வாக்கு முடிவுகளை வெளிப்படுத்தும் பதிவுகள் அனைத்துமே வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் முற்றிலும் தவறான தகவல் என FactSeekers உறுதிப்படுத்துகிறது.