Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மாமாவை பழிதீர்க்கவே மகளை கடத்தியதாக சந்தேகநபர் தெரிவிப்பு

T

The Leader Desk

ஜனவரி 13, 2025 • 1:38 PM

மாமாவை பழிதீர்க்கவே மகளை கடத்தியதாக சந்தேகநபர் தெரிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இளைஞன் மாணவியை கடத்தியமைக்கான காரணத்தை வௌிப்படுத்தியுள்ளார்.
  • தவுலகல பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் 18 வயது மகள் கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட மாணவி மற்றும் சந்தேகநபரை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்களை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
  • இது தொடர்பாக அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபரும் சிறுமியும் இன்று (13) காலை அம்பாறை பேருந்து நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்படும் சொகுசு பேருந்தில் இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
எழுத்து அளவு:

இளைஞன் மாணவியை கடத்தியமைக்கான காரணத்தை வௌிப்படுத்தியுள்ளார்.

குறித்த சந்தேகநபர், தனது மாமாவின் மகளையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர், ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்ததாகவும், அங்கு சம்பாதித்த பணத்தை தனது மாமாவிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

பணம் தனக்குத் திருப்பித் தரப்படாததால், இதுபோன்ற செயலைச் செய்யத் தூண்டப்பட்டதாகவும் சந்தேகநபர் கூறியுள்ளார்.

தவுலகல பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் 18 வயது மகள் கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட மாணவி மற்றும் சந்தேகநபரை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்களை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, கடத்தலை மேற்கொண்ட சந்தேகநபரின் கைப்பேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், சந்தேகநபர் அம்பாறை பொலிஸ் பிரிவில் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபரும் சிறுமியும் இன்று (13) காலை அம்பாறை பேருந்து நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்படும் சொகுசு பேருந்தில் இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருப்பதாகவும், சிறுமியை வைத்தியவரிடம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...