Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள்

T

The Leader Desk

ஜனவரி 13, 2025 • 3:28 AM

மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தினத்தின் இறுதி நாளான நேற்று தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் விற்பனை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
  • இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் தாம் இந்த விழாவின் போது சந்தித்ததாக சாணக்கியன்தெரிவித்துள்ளார்.
  • தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் இந்தக் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

 தினத்தின் இறுதி நாளான நேற்று தமிழகத்தில் வாழும் புலம்பெயர்  இலங்கைத் தமிழர்களின் விற்பனை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் இந்தக் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, புலம்பெயர் இலங்கை தமிழர்களின் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பல காலமாக அகதிகளாக வாழும் இலங்கையர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் தாம் இந்த விழாவின் போது சந்தித்ததாக சாணக்கியன்தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்

இதேவேளை அயலக தமிழர் மாநாடு சென்னையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

இக்கலந்துரையாடலின்போது, இலங்கை வாழ் தமிழர்களின் வளர்ச்சி குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த காலங்களில் இலங்கை மக்களுக்கு தமிழக முதலமைச்சர் செய்த உதவிகளை நினைவுகூர்ந்தார்

மேலும் மு.க ஸ்டாலினுக்குக்கு செந்தில் தொண்டமான் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

Ind02.png

 

Ind_2.jpeg

 

Ind_3.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...