leader eng

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்

தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் ஆய்வு அறிக்கைகளை நம்ப வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சரியான கணக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் எனத் தெரிவித்தார்.

அதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் இருக்கும் எனவும் அந்தக் காலப்பகுதியில் பெறுபேறுகள் தொடர்பில் எதனையும் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, பல்வேறு விடயங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு தரப்பினரால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் குடிமகன் என்ற வகையில் தாம் விரும்பும் கட்சிக்கோ அல்லது நபருக்கோ வாக்களிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி