சட்டவிரோதமான முறையில்
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 16 தங்க பிஸ்கட்டுகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் நான்கு கோடியே நாற்பது இலட்சம் ரூபா என சுங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (13) காலை காலியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இந்த தங்க பிஸ்கட்டுகளை கொண்டு வந்துள்ளார்.
இந்த தங்க பிஸ்கட்களை 8 பொட்டலங்களாக 2 பொதிகளில மறைத்து கொண்டு வந்த நிலையிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்