1200 x 80 DMirror

 
 

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி

பொலிஸ் மா அதிபருக்கு மட்டும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லை என ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளது.

21ஆவது  அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம், பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இல்லாத நிலையில், ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட சட்டப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை, பொலிஸ் மா அதிபர் பதவி காலியாகவே இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை மேற்கொள்வதில் மாத்திரமே தடை உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி