தேர்தலை பிற்போடுவதனை 

தாம் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செய்ய முயற்சிக்க மாட்டார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (23) பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் வேட்புமனு தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும், கட்சியின் கொள்கைகளை காப்பாற்றும் ஒருவரே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தனிநபர்களை அடிப்படையாக வைத்து அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை. கொள்கைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறோம். நான் கட்சியின் தேசிய அமைப்பாளர். எனவே சூட்டை தைப்பது என் கடமை. பின்னர் யார் வேண்டுமானாலும் அணியலாம். சூட் தைக்கக் கொடுத்தவர்கள் அணியச் சென்றபோது பல கட்சிகள் அழிந்தன.
 
தமது கட்சியில் பல கருத்துக்கள் இருந்தாலும் கட்சி மற்றும் நாட்டின் எதிர்காலம் கருதி உரிய தீர்மானத்தை எடுப்பேன் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இதன்போது, ​​ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்க்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமது கட்சி வெற்றிபெறக்கூடிய வேட்பாளரை முன்வைப்பதாகவும் மொட்டின் வெற்றி மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தம்மிக்க பெரேரா மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் வேட்புமனுத் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, ​​“ஒவ்வொருவரின் பெயர்களும் உள்ளன. தம்மிக்க பெரேரா, அந்த பெரேரா, இந்த பெரேரா, அவர்கள் அனைவரும் இருக்கிறார்கள். தாம் மனதில் கொண்டுள்ள வேட்பாளரை தற்போதைக்கு வெளியிட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
 
அத்துடன், தனது மகன் நாமல் ராஜபக்க்ஷவின் வேட்புமனுத் தொடர்பில் வினவியபோது, ​​அது தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம்தான் கேட்க வேண்டும் என்றார். நாமல் ராஜபக்க்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி