1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்

முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினரும் கட்சியிலிருந்து ஒருவரை  வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என மற்றைய தரப்பினரும் கடுமையாக வலியுறுத்தியதால் இந்தக் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை முன்வைக்க வேண்டும் என கம்பஹா மாவட்ட கட்சிப் பிரதிநிதிகள் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
 
இந்தப் பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
 
இது தொடர்பில் கொழும்பு நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், எந்தவொரு பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள சுதந்திரமாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
 
எந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு பக்கபலமாக நிற்போம் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி