leader eng

ஆட்சியாளர்கள் அரசியலமைப்பு

குறித்து தெரிந்திருந்தால், மக்களை கொடுமைப்படுத்த முடியாது. IMF உடன்படிக்கை குறித்து இதுவரை அரசாங்கம் மக்களுக்கு பொய்களையே சொல்லி வந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் இணக்கமான உடன்பாட்டை எட்ட முடியும். இதற்கு தெளிவான மக்கள் ஆணையைடன் கூடிய அரசாங்கமொன்று அமைய வேண்டும். தெளிவில்லாத பெரும்பான்மையோடு தற்காலிக ஆணை மட்டுமே தற்போதைய ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. இது தெளிவான ஆணையைக் கொண்டமைந்த அரசாங்கமல்ல. தெளிவான ஆணையைக் கொண்ட அரசாங்கத்திற்கு பதிலளிக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கப்பாடு தெரிவித்துள்ளது. இங்கு நல்லதொரு உடன்பாட்டை எட்ட முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொய்யான தோற்றப்பாடுகளை உருவாக்கி, சர்வதேச பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது. எமது நாடு தற்போது ஏல பூமியாக மாறியுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய புத்திஜீவிகள் ஒன்றியத்தின் கம்பஹா மாநாட்டில் நேற்று(14) மாலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு பொருளாதார, சமூக, அரசியல், கலாச்சார, சமய சவால்கள் போலவே வாழ்வதற்கான சவால்கள் என பல சவால்களை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், 220 இலட்சம் மக்களும் பன்முக சவால்களுக்கு மத்தியில் பதில்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். பதில்களை வழங்குவோர் யார் என்பதனை தேடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பின்னனியில், தெளிவான தொலைநோக்கு மூலம் தெளிவான கொள்கை உருவாக்கங்கள் மூலம் தீர்வுகள் வழங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, மறு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கருதுகிறது. இதன் மூலம் பாரிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

IMG 20240715 204606 800 x 533 pixel

இந்தச் சவால்களுக்கு மத்தியில் நமது நாட்டின் முக்கியப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு டொலர்களையும் ரூபாய்களையும் பெறுவதே தீர்வு. இதற்கான சிறந்த தொலைநோக்குப் பார்வை யாரிடம் இருக்கிறது என்பது குறித்தே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 மக்கள் தீர்வுகளையே எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் பதில்களையும் தீர்வுகளையுமே எதிர்பார்க்கிறார்கள். இதற்கு பேச்சைப் போலவே செயல்பாடும் இருக்க வேண்டும். பேச்சைப் போல இதற்கு செயலும் முக்கியம்.

முதலாளித்துவமும் சோசலிசமும் இரண்டுமே தோல்வி கண்டுவிட்டன.

முதலாளித்துவ அமைப்பில் நன்மைகள் மேலிருந்து கீழாகப் பாய்வதை சிறந்த தீர்வாக பல நாடுகள் கூறுகின்றன. சோசலிசத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அரசால் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று கூறுகிறார்கள். தீவிர சோசலிசக் கொள்கைகளில், அரசின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளில் இந்த இரண்டு கோட்பாடுகளும் தோல்வி கண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒரு குழு கொள்முதல் முறைகளைப் பின்பற்றாமல் முதலீட்டை ஈர்ப்பதாக கூறிக் கொண்டு, நட்புவட்டார முதலாளித்துவ நண்பர்கள் கும்பலொன்றுக்கு வளங்களை சூறையாடவும், கூடிய இலாபமீட்டவும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இது ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கை போக்கல்ல. மனிதாபிமான முதலாளித்துவத்தையும் சமூக ஜனநாயகத்தையும் ஒன்றிணைத்த நடுத்தர பாதையே நாட்டுக்கு முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

IMG 20240715 204628 800 x 533 pixel

தொலைநோக்கு சிறந்ததாக இருந்தாலும், அதற்கு செயல்பாடு தேவை. 

எனவே, இந்த மூன்றாவது பாதையை முன்னெடுப்பதற்குத் தேவையான திறமையான குழுவை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளது. முற்போக்கான திட்டங்களை யதார்த்தமாகவும் நடைமுறை ரீதியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாலயே முன்னெடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். செயல்திறனுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பேச்சு செயலிலும் நிரூபிக்கப்பட வேண்டும். 76 ஆண்டுகால வரலாற்றை ஐக்கிய மக்கள் சக்தி அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக மாற்றியமைத்துள்ளது. இதுவே மக்கள் கோரிய முறைமை மாற்றம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஏனைய கட்சிகளை விட ஐக்கிய மக்கள் சக்தி பேச்சிலும் செயலிலும் அதை நிரூபித்துள்ளது. இந்த நாடு கட்டியெழுப்பப்பட வேண்டுமானால், தரவுகளை மையமாகக் கொண்ட, சாட்சி, ஆதாரங்களை மையமாகக் கொண்ட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் வங்குரோத்து நிலையை தவிர்க்க முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 சட்டத்தின் ஆட்சியைக் கொண்டமையாத சமூகமே இன்று காணப்படுகிறது.

சட்டத்தின் ஆட்சியைக் கொண்டமையாத சமூகமே இன்று காணப்படுகிறது. கொலைகள் அலைமோதுகின்றன. கொசுக்களைப் போல மக்கள் கொல்லப்படுகின்றனர். பொது மக்கள் பாதுகாப்பும் சட்டத்தின் ஆட்சியும் இங்கு இல்லை. சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டுமானால் அரசியல்வாதிகள் கொலைகாரர்களின் அடிமைகளாக மாறக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி