leader eng

பொலன்னறுவை, வெலிகந்த சிங்கபுர பகுதியிலிருந்து வெலிகந்த நோக்கிச் சென்ற கெப் வாகனம் இன்று (15)  சிங்கபுர பகுதியில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் சூரியவெவ சிங்கபுரவைச் சேர்ந்த 54 வயதான வசந்த உதயசிறி என்பவராவார்.
 
விபத்தில் சிக்கிய கெப் வண்டியில் ஆறு பேர் பயணித்துள்ளதுடன் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் காயமடைந்த ஏனைய ஐவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 
காயமடைந்தவர்கள் 21 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் வெலிகந்த சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக பொலன்னறுவைக்கு சென்றபோது இந்த  விபத்து இடம்பெற்றுள்ளதாகவ இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றன
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி