leader eng

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு

சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பயணித்த வாகனத் தொடரணியை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
 
கொள்ளுப்பிட்டி ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை 28ஆவது வீதி சந்திக்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 
 
பொத்துவில் பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய நபருடன் குறித்த இளைஞன் ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்துக்கு வந்துள்ளதாகவும், அதன்போது  வாகனத் தொடரணியொன்று பயணிப்பதை காணாத காரணத்தினால் வீடியோ எடுத்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி