(பாறுக் ஷிஹான்)

இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்
ஏற்பாட்டில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு 2024  தொடர்பாக  இந்திய அதிதிகளுடனான விசேட சந்திப்பும் கலந்துரையாடலும் புதன்கிழமை(3) இரவு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுவில் தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
 
குறித்த நிகழ்வானது ஏ.எல்.அன்சார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அதிதியாக இக்ரா ஜலால் மற்றும் பிரதம அதிதிகளாக இந்தியாவின் முன்னாள் மாநில சட்ட சபை உறுப்பினர் கே.ஏ.எம் முஹம்மட் அபூபக்கர், இந்தியா தமிழ்நாடு சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.சாஹூல் ஹமீட், இந்தியா தமிழ்நாடு பகுதியை சேர்ந்த எம்.ரைய்னார் முஹம்மட் கடாபி ,முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் சாதிக் சிஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
IMG 20240704 171655 800 x 533 pixel
 
இந்தச் சந்திப்பில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2024 தொடர்பாக ஆராயப்பட்டதுடன் பல்வேறு உதவிகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக இந்திய அதிதிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
 
IMG 20240704 171611 800 x 533 pixel
 
அத்துடன் மாநாடு தொடர்பாக இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய அதிதிகள் தெரிவித்துள்ளதுடன் மாநாடு வெற்றி பெற பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டனர்.
 
IMG 20240704 171548 800 x 533 pixel
 
2024 உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை முன்னிட்டு எமது மாநாட்டுக் குழுவின் அடுத்த கட்டம் பேராசிரியர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளதாகவும் பின்னர் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை மாவட்ட ரீதியாக ஒருங்கிணைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள உள்ளதாக   கலாநிதி ஏ.எல்.அன்சார் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
 
IMG 20240704 171512 800 x 533 pixel
 
இதன் போது இலங்கைத் தமிழ்எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்திய அதிதிகள் உள்ளிட்ட ஏனைய அதிதிகளுக்கு  பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னத்துடன் கெளரவம் வழங்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி