Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

தியகம சர்வதேச மைதானத்திலிருந்து மஹிந்தவின் பெயரை நீக்கத் திட்டம்

T

The Leader Desk

ஜனவரி 12, 2025 • 9:24 AM

தியகம சர்வதேச மைதானத்திலிருந்து மஹிந்தவின் பெயரை நீக்கத் திட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ராஜபக்ஷவின் பெயர் நீக்கப்படும் என, அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
  • அத்தோடு, கட்டுமானத்தின் போது நடந்த மோசடி மற்றும் ஊழல் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
  • இதன்படி, மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் மைதானம் காணப்பட்டால், எந்த தனியார் துறை முதலீட்டாளர்களும், இந்த விளையாட்டு வளாகத்தை நடத்துவதற்கான பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

ராஜபக்ஷவின் பெயர் நீக்கப்படும் என, அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில், செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே, மேற்படி மைதானத்தின் கட்டுமானத்தில் பெரும் தொகை வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், வளாகம் இப்போது பாழடைந்த நிலையில் இருப்பதாகவும், அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி, மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் மைதானம் காணப்பட்டால், எந்த தனியார் துறை முதலீட்டாளர்களும், இந்த விளையாட்டு வளாகத்தை நடத்துவதற்கான பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு,  கட்டுமானத்தின் போது நடந்த மோசடி மற்றும் ஊழல் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், செய்யப்பட்ட பணிகள் ராஜபக்ஷர்களுக்கு பொருத்தமாக இருந்தாலும், அது நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் பொருந்தாது என்றும் சுனில்குமார கூறியுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பு விளையாட்டு வளாகத்திற்கென கொண்டுவரப்பட்ட ஒரு கொள்கலனில், மில்லியன் கணக்கான  ரூபாய் மதிப்புள்ள ஜெனரேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த விளையாட்டு வளாகத்தில் உள்ள பொருட்களின் பட்டியல் எதிலுதே அதுபற்றி தகவல்கள் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...