Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாரச்சி காலமானார்

T

The Leader Desk

ஜனவரி 12, 2025 • 5:43 AM

முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாரச்சி காலமானார்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இந்திரதாச ஹெட்டியாரச்சி இன்று காலை காலமானார்.
  • இறக்கும் போது அவருக்கு வயது 99 ஆகும்.
  • இவர், களுத்துறை மாவட்ட அமைச்சர், தென்னை மற்றும் பயிர் பல்வகைப்படுத்தல் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
எழுத்து அளவு:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இந்திரதாச ஹெட்டியாரச்சி இன்று காலை காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 99 ஆகும். நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், களுத்துறை மாவட்ட அமைச்சர், தென்னை மற்றும் பயிர் பல்வகைப்படுத்தல் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

1948ஆம் ஆண்டு நடைபெற்ற கும்புக்கபன்துவ கிராம நிர்வாக சபைத் தேர்தலில் ஹெனேகம பிரிவின் கிராம நிர்வாக உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

அந்தக் காலகட்டத்தில், அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஹொரணைத் தொகுதியின் வளர்ச்சிக்கு வலுவான பங்களிப்பைச் செய்தார்.

அவர், பொக்குனுவிட்ட ஜனசெத அறக்கட்டளை திட்டம் உட்பட பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார், மேலும் ஹொரண ரோயல் கல்லூரியின் நிறுவனர் ஆவார்.

இவரின் சடலம், நாளை வரை கொழும்பில் உள்ள ஜயரத்ன மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14ஆம் திகதி ஹேனகம, பொக்குன்விட்டவில் உள்ள அஜந்தா இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, 15ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் பொக்குன்விட்டவில் உள்ள கேந்திர மைதானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாரச்சி காலமானார் | Tamil Leader | We Lead the Nation