ஹஜ்ஜுக்கு சென்ற இலங்கை

யாத்திரிகர் ஒருவர் இன்று (19) திடீரென உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்றை வசிப்பிடமாகக் கொண்ட அல்ஹாஜ் ஆதம்லெப்பை அப்துல் கபூர் என்ற 68 வயதுடைய ஹாஜியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
மாரடைப்பு காரணமாக சவூதி அரேபியாவின் மக்காவில் உள்ள அப்துல் அஜீஸ் கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்
 
ஜனாஸா புனித நகரமான மக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி