பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட

வீரமுனை கிராம வீதி வரவேற்பு கோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை(15) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பணியை ஆரம்பித்து வைக்க அடிக்கல் நட வருகை தந்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற உத்தரவை சம்மாந்துறை பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வாசித்து காட்டியதுடன் அப்பகுதியில் இடம்பெறவிருந்த பதற்ற நிலைமையை சீர் செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (14) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பதற்கு எதிராக இரு நபர்களினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதற்கு அமைய இந்த நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நௌபர் நீதிமன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் சனிக்கிழமை (15) சம்மாந்துறை பொலிஸ் பிரதேசத்துக்கு உட்ப்பட்டதும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உட்பட்டதுமான சம்மாந்துறை ஆண்டியடி சந்தி எனும் இடத்தில் வீரமுனைக்கு செல்லும் வீதியில் வீரமுனை பிரதேசவாசிகளால் வரவேற்பு கோபுரம் ஒன்று அமைப்பதற்க்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பபடவிருந்தது.

இதனால் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் முரண்பாடு ஏற்படுவதற்கு சாத்தியமுள்ளதாலும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், சமாதான சீர்குலைவு, மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட கூடியதான நிலை காணப்படுவதாலும் இந்நிகழ்வை நடத்துவது உசிதமானது அல்ல என்பதனால் இந்த நிகழ்வை நடத்தாமல் நிறுத்துமாறு நடத்துவதனை நிறுத்துமாறு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தைக் கோரியிருந்தனர்.

இந்நிலையில், குறித்த இடத்துக்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வருகை தந்திருந்தபோது சம்மாந்துறை பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அமைதியாக அங்கிருந்து சென்றார்

இதேவேளை, வீரமுனை பிரதேச மக்களினால் குறித்த நீதிமன்ற உத்தரவை மீறி கம்பி கூடுகள் நாட்டப்பட்டன.

இதனால் தமிழ் -முஸ்லிம் மக்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டதனையடுத்து பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு பாதுகாப்பு வழங்கினர்.

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.சி.எம். சகீல், நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாவின் சம்மாந்துறைக்கான இணைப்புச் செயலாளர் ஆக்கிப் அன்சார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினர் கோவில் நிர்வாகத்தினர் கிராம சேவை உத்தியோகத்தர் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்தவர்களும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி