விடுதலைப் புலிகளை தோற்கடித்து

வடக்கு, கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க  ஆகியோர் வட. மாகாணத்துக்குச் சென்று 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படும் என கூறியதை நான் பார்த்தேன்.

மஹிந்தவின் காலத்திலேயே புலிகளைத் தோற்கடித்து 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்து அவர்கள் விரும்பும் முதலமைச்சர் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகளை நியமிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

வடக்கில் வாக்களிக்கும் உரிமையைக் கூட புலிகள் தடை செய்திருந்தனர் .மாகாணசபையல்ல தனி நாடு வேண்டும் என்றே கேட்டனர் . 

13ஆவது திருத்தம்ஏற்கனவே நடைமுறையில் உள்ளது வடக்கில் தேர்தலை எதிர்பார்த்து அரசியல் இலாபங்களுக்காக தேர்தலை வைத்துக் கொண்டு ஏனைய கட்சிகள் இவ்வாறு பேசுவது உண்மையில் வருத்தமளிக்கிறது . வடக்கின் அபிவிருத்தி பற்றி  இவர்கள் பேசவே இல்லை.

ஆனால், எமது அரசாங்கத்தின் காலத்தில்தான் வடக்கு வசந்தம், கிழக்கு உதயம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. எனவே 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் மாகாண சபை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் . 

13ஆவது திருத்தச் சட்டத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தி  வடக்கில் வாக்கு கேட்கவோ வடக்கு மக்களின் உணர்வுகளுடன் விளையாடவோ வேண்டாம் என்றார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி