சர்வஜன வாக்கெடுப்பு இன்றி ஜனாதிபதியின் பதவிக்

காலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  ஒரு வருடத்துக்கு  நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில்  விவாதிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜனாதிபதிக்கு விசுவாசமான தரப்பினர் சட்டத்துறை நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 வருடத்திலிருந்து 6 வருடங்களாக இந்த வகையில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகக் குறைத்தது போன்று 2/3 பெரும்பான்மையுடன் 5 வருடங்களிலிருந்து 6 வருடங்களாக பதவிக் காலத்தை நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி