பாறுக் ஷிஹான்

மோட்டார் சைக்கிளில் வீதியால்

சென்ற இளைஞரை தான் பயணித் காரினால் மோதி தப்பி சென்ற வைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன. பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு ஒரு இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் என கட்டளையிட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை வழக்கை கல்முனை நீதிவான் நீதிமன்று ஒத்தி வைத்துள்ளது.

குறித்த வழக்கு திங்கட்கிழமை (10) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் சமர்ப்பணம் உள்ளிட்டவாதி, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் ஆகியோரின் சமர்ப்பணம் வாதங்களின் அடிப்படையில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரையே  5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதுடன் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு ஒரு இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும்  என உத்தரவிட்டார்.

மேலும் குறித்த வழக்கு எதிர்வரும்   ஜூலை மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி