எச்.எம்.எம்.பர்ஸான்

பலத்த காயங்களுடன் இளைஞர்

ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகிலிருந்தே அடிகாயங்களுடன் இந்த  இளைஞர் இன்று (11) மீட்கப்பட்டுள்ளார்.

பாலத்துக்கு அருகில் இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கல்குடா அகீல் அனர்த்த அவசர சேவைப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய அதன் பணிப்பாளர் நியாஸ் ஹாஜியார் குழுவினர் இளைஞரை மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

IMG 20240611 183212 800 x 533 pixel

புத்தளம் பஸ்ஸில் வந்த குறித்த இளைஞரும் இன்னுமொரு இளைஞரும் ஓட்டமாவடி - நாவலடி பகுதியில் பஸ் நிறுத்தப்பட்டிருந்த போது  வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குறித்த இளைஞர் மீது மற்றைய இளைஞர் பொல்லால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....