பிரபஞ்சம் திட்டத்தை

முன்னெடுக்க யாழ்ப்பாணத்துக்குச்  சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விசேட அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் விடுத்த அழைப்பின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று (10)  மாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் பாடசாலை பஸ் வழங்கும் வேலைத்திட்டங்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நாட்களில் யாழ் மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதே இச்சந்திப்பு இடம்பெற்றது.

இங்கு இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நீண்டநேரம் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி