ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நியமிக்கப்பட்டதனை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (11) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே தடை உத்தரவு நீடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி நீதிமன்றத்திடம் கோரினார்.

அதையடுத்து, இந்த தடை உத்தரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான லசந்த அழகியவண்ணவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி