மருதானையிலிருந்து பெலியத்த

நோக்கிச் சென்ற ரயிலின் நான்கு பெட்டிகள் இன்று (7) இரவு அளுத்கம ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் கழன்ற நிலையில்  அந்த நான்கு பெட்டிகளும்  இன்றி அளுத்கம ரயில் நிலையத்தை வந்தடைந்ததாகவும் அளுத்கம ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த ரயிலின் பெட்டிகள் இரவு 7.40 மணியளவில் கழன்றுள்ளதாகவும் பின்னர் ரயில் மீண்டும் இயக்கப்பட்டு நான்கு பெட்டிகளையும் இணைத்து அளுத்கம ரயில்  நிலையத்தை வந்தடைந்ததாகவும் புகையிரத அவர் தெரிவித்தார்.
 
அளுத்கம ரயில் நிலையத்தின் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், நான்கு பெட்டிகளையும் மீள இணைத்து மீள ரயில் புறப்பட தயாரானபோது மின்சாரக் கோளாறு காரணமாக ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டதாகவும் பின்னர் இரவோடு இரவாக மின்சாரம் சீரமைக்கப்பட்டு பெலியத்த வரை பயணத்தை ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....