நாவலப்பிட்டி குருதுவத்த கல்பாய பிரதேசத்தில்

உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை இன்று (07) முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று அதிகாலை 3.45 மணிளவில் தேயிலை தொழிற்சாலையின் கீழ் தளத்திலிருந்து ஆரம்பித்த தீ மூன்றாவது மாடிக்கும் பரவியதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தால் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என குருதுவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி