டொனெட்ஸ்க் (Donetsk) நகர ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து

உக்ரைனுக்கு எதிராகப் போரிட்டபோது. காயமடைந்த இலங்கை இராணுவ வீரர் ஒருவர் மருத்துவமனையில்  சுமார் ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெறுகிறார். 

ரஷ்ய இராணுவம் முதலில் அவரை டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தது, இதுவரை அவர் நான்கு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்,

ஏனெனில் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. இப்போது அவர் ரஷ்யாவின் முக்கிய இராணுவ மருத்துவமனைகளில் ஒன்றில் சிகிச்சை பெறுகிறார்.

ஆனால் ஆறு வாரங்களுக்குப் பின்னரும் அவரால் நடக்க முடியவில்லை. இடது கை விரல்களைக் கூட வளைக்க முடியாத நிலைமை.

சுகயீனம் காரணமாக போர்முனைக்கு செல்லாவிட்டாலும் ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதால் மீண்டும் போர்முனைக்கு அனுப்பப்படமாட்டார்கள்  என்ற உத்தரவாதம் இல்லை.


போரில் காயமடைந்த ஓய்வுபெற்ற இலங்கை ராணுவ வீரர்கள் பலர் தற்போது லுகான்ஸ்க், டொனெட்ஸ்க், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க், ஹர்கோஃப் போன்ற பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் உள்ளனர்.

மருத்துவமனையில் உள்ள இலங்கை ராணுவ வீரர் ஒருவரின் வேண்டுகோளை இந்த காணொளியில் காணலாம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி